
மகாராஷ்டிராவில் இனி மற்றொரு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய தேவையில்லை என மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பொது இடங்களுக்கு செல்லும்போது அடுத்த 6 மாதங்களுக்கு பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும். வரும் முன் காப்பதே சிறந்தது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.
மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கோ அல்லது மற்றொரு முழு ஊரடங்கோ அமல்படுத்த வேண்டும் என சிலர் எனக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால், மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கோ அல்லது மற்றொரு முழு ஊரடங்கோ அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை.
261 Views
