வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

வேளாண் மசோதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பாஜகவினரை விரட்டிய தஞ்சை மக்கள்

புதிய வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜாகாவினரை தஞ்சாவூர் மக்கள் விரட்டி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசயிகள் 25 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக இந்தியாவின் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றது.

இந்த புதிய வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக பாஜாகாவினர் இந்த புதிய சட்டம் குறித்து விளக்க பிரச்சாரம் மேற்கொண்டு வருன்றனர். அதேபோல் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனையிலும் பாஜகவினர் வேளாண் சட்ட விளக்கம் மற்றும் ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தபோது பெரிய பேட்டை பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் பாஜகவினர் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை வாங்கி கிழித்து போட்டு, பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்தி திரும்ப செல்லுமாறு கூறியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் உண்டானது. மேலும் இளைஞர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் அதிகளவில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவினர் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

244 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன