
2020 ஐபிஎல் தொடரில் மும்பைக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான ஆட்டத்தில் மும்பை வீரர் சூர்யாகுமார் யாதவ் அடித்த பந்து ஒன்றை டைவ் அடித்து பிடித்தார் சுப்மான் கில். இந்த நிகழ்வு அப்போது இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டதோ இல்லையோ இப்போது பேசப்படுகிறது. காரணம் சச்சின் மகள் சாரா தான்.
சச்சின் டெண்டுல்கர் அனைவராலும் பாராட்டப்படும் ஒரு மதிப்பு மிக்க வீரர். அவர் கிரிகெட் வாழ்கையில் எந்தவொரு சர்ச்சை, கிசுகிசுக்களிலும் வைரலானது இல்லை. ஆனால் அவரது மகள் சாரா டெண்டுல்கர் சச்சின் மகள் என்பதை தாண்டி கிசுகிசு மூலமே பிரபலமாகி வருகிறார். காரணம் அவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி சுப்மான் கில் புகைப்படத்தை பகிர்வது தான். ஐபிஎல் தொடரில் அவர் டைவ் அடித்து பிடித்த நிகழ்வை பகிர்ந்து ஹார்ட் போட்டு பகிர்ந்துள்ளார். குறிப்பாக சுப்மான் கில் மட்டும் இருக்கும் புகைப்படத்தை பகிர்வது, அதற்கு ஹார்டின் சிம்பல் கொடுப்பது என அவரே தானாக கிசுகிசு எழ வாய்ப்பை கொடுக்கிறார்.

சில நாட்களுக்கு முன் சாரா தனது புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ‘I spy’ என மேற்கோளிட்டு இருந்தார். அதே போல் சுப்மானும் தன்னுடைய புகைப்படத்தை பகரிந்து I spy என பதிவிட்டுள்ளார். இப்படி சமீபகாலமாக இவர்கள் காதல் விவகாரம் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இருப்பினும் வெளிப்படையாக யாரும் உறுதிப்படுத்தவில்லை. இவர்கள் ஜோடியானால் அனுஷ்கா – கோஹ்லி ஜோடிக்கு பிறகு இவர்கள் ஜோடி பெரிய அளவில் பேசப்படும்.

