ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

வீடுதேடி வரும் பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன்!

 

பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டுமென ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதிக்குள் வழங்கப்படும். ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்த தெரு வாரியாக சுழற்சி முறை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும். முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நியாய விலைக் கடை பணியாளர்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவேண்டும். முற்பகலில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பிற்பகலில் வரும் பட்சத்தில் அவர்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

243 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன