
விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறும் “மாஸ்டர்”
மாஸ்டர் படத்தை நம்பி தான் மொத்த இந்திய சினிமாவே இருக்கிறது என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. மாஸ்டர் படத்தின் இந்திய வெளியீட்டை பார்த்துவிட்டு தான் மற்ற நடிகர்களும் தங்களது படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.இதில் பாலிவுட் முன்னணி ஹீரோக்களின் படங்களும் அடங்கும்.
இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் தற்போது இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது உறுதியாக தெரிய வந்துள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். சமீபத்தில்தான் மாஸ்டர் படம் தமிழில் யுஏ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் தெலுங்கு டப்பிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது ஹிந்தி டப்பிங்கும் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக இந்திய சினிமாவின் பிரபலம் ஒருவர் தன்னுடைய ட்விட்டர்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பிகில் படத்திற்கு பாலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மாஸ்டர் படத்தை நேரடியாக இந்தியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறுகிறது மாஸ்டர்.
இதனை தளபதி ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். மேலும் விஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த படம் நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
273 Views