வியாழக்கிழமை, செப்டம்பர் 24
Shadow

நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் தேர்வு!

 

நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் பதவி ஏற்றுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வென்று இருந்தனர். தற்போதுபஞ்சாயத்து போர்டு, வார்டு கவுன்சிலர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

இந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் மேயர் ஆகப் பதவி ஏற்றுள்ளார். இவர் பி.எஸ்சி கணிதம் முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எஸ்.எஃப்.ஐ உறுப்பினராகவும் தலைவராகவும் எனப் பல பதவிகள் வகித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே இவர் தேர்தலை வென்றுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன