செவ்வாய்க்கிழமை, மே 28
Shadow

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு 20 டன் அன்னாசிப் பழங்களை அனுப்பிய கேரள விவசாயிகள்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு லாரி நிறைய 20 டன் அன்னாசிப் பழங்களை கேரள விவசாயிகள் அனுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இருந்து விவசாயிகள் லாரி நிறைய அன்னாசிப் பழங்களை டெல்லிக்கு அனுப்பினர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வாழகுளம் என்ற நகரத்தில் அன்னாசிப் பழம்விளைச்சல் அதிகமாக இருப்பதால் இது அன்னாசி நகரம் என்றுஅழைக்கப்படுகிறது. வாழகுளத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு லாரியில் 20 டன் அன்னாசிப் பழங்களை அனுப்பி வைத்தனர்.

அந்த லாரியை கேரள விவசாயத்துறை அமைச்சர் சுனில் குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார். நாடு முழுவதும் உள்ளவிவசாயிகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயி களை பாராட்டும் வகையிலும் அவர்களுக்கு ஆதரவாகவும் அன்னாசிப் பழங்களை அனுப்பினோம் என்று வாழகுளம் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித் தனர்.

163 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன