புதன்கிழமை, மே 15
Shadow

நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயம்

 

நாடு முழுவதும் நாளை (ஜனவரி 1) முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் பதிவு செய்யாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சுங்கக் கட்டணம் செலுத்தி வந்தன. இதனால் நேர விரயமும், எரிபொருள் செலவும் ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்யும் வகையில் ஃபாஸ்ட் டேக் முறை கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் வாகனங்கள் ஆன்லைனிலேயே சுங்கக்கட்டணத்தை செலுத்தி விட்டு, சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லலாம். இத்தகைய ஃபாஸ்ட் டேக் முறையானது ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாகவும், எனவே ஃபாஸ்ட் டேக் பதிவு செய்து, அந்த ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதற்காக சுங்கச்சாவடிகள், ஆன்லைன் தளங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முழுமையாக ஃபாஸ்ட்டேக் முறைக்கு மாறாதவர்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் உடனே ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாறும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

157 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன