சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

மாறன் சகோதரர்களை கடுமையாக சாடிய திமுக எம்.பி!

ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேபோல தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எல்லாவற்றிலும் விளம்பரம் செய்து வருகின்றன கட்சிகள். அப்படி அதிமுக விளம்பரம் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமானதுதான் சன் குழுமம். அதன் முக்கிய சேனலான சன் டிவியில் இப்படியான விளம்பரம் ஒளிபரப்பானது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தர்மபுரியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் குரலெழுப்பியுள்ளார்.

அவர், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘சேற்றில்/ஆற்றில் கால். சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை. அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள்’ என்று பதிவிட்டு மாறன் சகோதரர்களை கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் அவர், ”எங்களுக்கு தொழில் தான் முதல். அது தான் முக்கியம். திமுகவிற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் என்றும் இருக்காது. திமுக விடம் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை, என்று வெளிப்பயடையாக அவர்கள் அறிவித்துவிட்டு இது போல் விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பட்டும்’ என்றும் கூறியுள்ளார்.

 

341 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன