வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நான் உண்மையாக இருப்பதால்தான் இத்தனை பணியிடமாற்றம் : ஐபிஎஸ் அதிகாரி ரூபா உருக்கம்!

பணிக்காலத்தில் அதிகளவு பணிமாற்றம் செய்யப்பட்டதால ஐபிஎஸ் அதிகாரி ரூபா டிவிட் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள்துறை செயலாளரான ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபா கர்நாடக மாநிலத்தின் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர்க பணியிட மாற்றம் செய்யப்பட்டார்

இந்த இடமாற்றத்திற்கு ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பால்கருடன் ஏற்பட்ட மோதல்தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. நிம்பல்கர் உள்பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்படுவதற்கு முன் கூடுதல் ஆணையர் பொறுப்பில் இருந்தார்

பெங்களூரு நகர திட்டத்தின் டெண்டர் பணியில் முறைகேடு நடந்ததாக ரூபா குற்றம்சாட்டியதால் இருவருக்குள் மோதல் வெடித்தது. ரூபா தேவையில்லாமல் டெண்டர் பணியில் தலையிடுவதாக நிம்பல்கர் குற்றம்சாட்டினார்

இதனால் இடம்மாற்றம் செய்யப்பட்ட ரூபா, பணிக்காலத்தில் இரண்டு மடங்கு அதிகமான பணிமாற்றம் செய்யப்பட்டதாகவும், நான் உறுதியான நடவடிக்கை எடுத்ததால் இந்த பணியிட மாற்றம் இருக்கலாம் என்றும் ஆனால் தொடர்ந்து என்னுடைய வேலையை சமரசமின்றி செய்வேன் என கூறியுள்ளார். என்னுடைய மாற்றத்தால் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அதை வரவேற்பதாகவும் டிவிட் செய்துள்ளார்

266 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன