ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்!

முதல்வர் வாகனம் பின்னால் 
அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்!


அதிக வேகம் ஆபத்தானது… இதை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கான்வாய் வாகன அணிவகுப்பில் நடந்துள்ளது.

விபத்து நடக்கும் போது அங்கிருந்த பொதுமக்களில் யாரோ ஒருவர் எடுத்த வீடியோவை பார்த்தபின்
முதல்வர் வாகனத்தை பின் தொடர்ந்து செல்லும் போது அவ்வளவு வேகம் தேவையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

மறைந்த பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் மற்றும் சிலையை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்க சென்றார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து அதிமுக பிரமுகர்கள் வாகனத்தில் அணிவகுத்து சென்றனர். அப்போது வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது முன்னால் சென்ற கார் மீது மற்றொரு கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் சேதமானது.
உடனே போலீசார் அந்த வாகனத்தை சாலையில் இருந்து நகர்த்தி மற்ற வாகனம் செல்வதற்கு வழிவிட்டனர். இந்த சம்பவத்தல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
282 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன