செவ்வாய்க்கிழமை, மே 5
Shadow

பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு


 

பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் 19ஆம் தேதி சேலத்தில் தொடங்கிய முதல் நாள் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதல்வர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது.

பரிசுத் தொகைக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாக திமுக தொடர்ந்த வழக்கில், அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டது

 

226 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன