செவ்வாய்க்கிழமை, மே 5
Shadow

பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் – காங்கிரஸ்

பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ பயன்படுத்தஅவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பீகார் பாகல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும், பாலிவுட் நடிகை நேஹா ஷர்மாவின் தந்தையுமான அஜித் சர்மா கூறுகையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுவான மக்களிடையே பல்வேறு வகையான சந்தேகங்கள் இருப்பதாக கூறினார்.

இதைக் கருத்தில் கொண்டு, முதலில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாரதீய ஜனதா கட்சியின் பெரிய தலைவர்கள் தடுப்பூசி எடுத்து மக்களின் சந்தேகங்களை நீக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதிகள் இதற்கு முன்னர் தடுப்பூசி எடுத்து கொண்டதை மேற்கோள்காட்டி இதை தெரிவித்தார்

267 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன