திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

‘தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல’ – கே.பி. முனுசாமி

அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக-வின் முக்கியத்தலைவர்கள் பேசினர். அதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசியதாவது:-

* (தமிழக சட்டசபை தேர்தலில்) தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல.

* தேர்தலில் திமுக-அதிமுக இடையேதான் நேரடி போட்டி

* ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் போட்டி.

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அவர் தனது பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக கூறும் பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால், அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளதா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இந்த விவகாரம் தேசிய கட்சியான பாஜக-வுக்கும், அதிமுகவுக்கும் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறியுள்ள நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

238 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன