வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

மத்திய மந்திரி கார் விபத்து – மந்திரியின் மனைவி உயிரிழப்பு





மந்திரி கார் விபத்து – மந்திரியின் மனைவி உயிரிழப்பு மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை
இணை மந்திரியாக செயல்பட்டு வருபவர் ஸ்ரீபாத் நாயக்.
இவர் தனது மனைவி விஜயா நாயக் மற்றும் உதவியாளர்கள் சிலருடன் இன்று மாலை
கர்நாடக மாநிலம் எல்புரா பகுதியில் இருந்து கொஹர்னா என்ற பகுதிக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
மத்திய இணை மந்திரி பயணம் செய்த கார் உத்தர கன்னடா மாவட்டம் அகோலா தாலுக்கா
ஹசோஹமி என்ற கிராமம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக், அவரது மனைவி விஜயா மற்றும் உதவியாளர்கள் 3 பேரும் காயமடைந்தனர்.
குறிப்பாக மத்திய மந்திரியின் மனைவி விஜயாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த விபத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு
அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கார் விபத்தில் படுகாயமடைந்த மத்திய இணை மந்திரியின் மனைவி விஜயா நாயக்
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயங்களுடன் மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கூடுதல் சிகிச்சை அளிப்பதற்காக மத்திய மந்திரி கோவாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கார் விபத்தில் மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக் உயிரிழந்த
சம்பவத்திற்கு பிரதமர் மோடி, கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
238 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன