சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு  கல்தா?! 

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு  கல்தா?!

தமிழகத்தில் மிகவும் வலுவான கட்சிகளில் முதன்மையாக உள்ள கட்சி அதிமுக. அக்கட்சியின் தலைமையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாஜக, தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த கூட்டணியில் இருந்து ஒரு கட்சியை சைலண்டாக கழட்டிவிட முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை வந்த மத்திய உள் துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான அமித் ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  இதனைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பாஜக -அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தினார்.

ஆனால், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் விஜயகாந்த் அவதிப்பட்டு வந்த விஜயகாந்தை, கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற ரீதியில், மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திக்க, வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியானது.  ஆனால், விஜயகாந்த்தை அவர் சந்திக்கவில்லை.

இதனால், அப்போதே அதிமுக -பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக கழட்டிவிடப்படும் என தகவல் வெளியானது. மேலும், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ்கக்கு, எம்பி பதவி கேட்டும் அடம் பிடித்து வருகிறார்களாம். இதுவும் பாஜக – அதிமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம். விஜயகாந்த் புதல்வர்கள் பேச்சும் அதிமுக தலைவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சுமார் 40 தொகுதிகளை கேட்டு வருகிறதாம். ஆனால், அதிமுக 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கமுடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டதாம். இதனால், கூட்டணி உரசல் ஏற்பட்டது.  இந்நிலையில், கூட்டணியில் தேமுதிகவை சேர்ந்தால், கூடுதல் தொகுதிகளை கொடுக்க வேண்டும்.

இதனால் மற்ற கட்சிகளுக்கு தொகுதி கொடுப்பதில் சிக்கல் வரும். மேலும், முன்பு போல விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்யமுடியாது. இதனால், எதற்காக இத்தனை தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்கவேண்டும் என அதிமுக தலைமை முடிவுக்கு வந்துவிட்டதாம். அதிமுகவின் முடிவுக்கு பாஜக பச்சை கொடிகாட்டிவிட்டதாம்.

இதனால், அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக கழட்டிவிடப்படுவது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

699 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன