ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 1
Shadow

தமிழக சட்டசபை தேர்தலை நடத்த செலவு ரூ.621 கோடி!

தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படுகிறது.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் கமி‌ஷன் எடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மாநில அரசிடம்  ரூ.621 கோடி கேட்டுள்ளோம்.

* கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன