வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தனுஷ் – செல்வராகவன்-தாணு கூட்டணி படத்தின் தலைப்பு!

இயக்குநர் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன் படி, படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
448 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன