திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3
Shadow

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்!

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதில் இருவர் மரணம் அடைந்ததாகவும், 
அதற்கான காரணத்தையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
தொடர்ந்து நேற்றும், இன்றும் நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயது நபருக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். மூன்று டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது.
அதில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளைவுகளால் மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்றொருவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர். இவருக்கு 43 வயது.
நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர், இன்று மரணம் அடைந்தார்.
அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்முடிவில் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
331 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன