வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

தனுஷின் கர்ணன் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி ரிலீஸ்!

தனுஷின் கர்ணன் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி ரிலீஸ்!

தனுஷின் 41-வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
278 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன