வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

தடுப்புகள் அருகில் சாலையை தோண்டி ஆணிகளை புதைத்து வைத்த போலீசார்

தடுப்புகள் அருகில் சாலையை தோண்டி ஆணிகளை புதைத்து வைத்த போலீசார்

டிராக்டர் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதால், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் மூன்று எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேசம் – டெல்லி காசிபூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை கலைத்துவிட வேண்டும் என போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேவேளையில் விவசாயிகள் மீண்டும் குவிந்து வருகின்றனர். இதனால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தடுப்புகள் (barricades) கொண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை வன்முறை வெடித்துவிடக் கூடாது என்பதில் போலீசார் கவனமாக உள்ளனர்.
இதனால் தடுப்புகள் அருகில் சாலையை தோண்டி போலீசார் ஆணிகளை புதைத்து வைத்துள்ளனர். விவசாயிகள், டிராக்டர்கள் அந்த இடத்தை கடந்த வரமுடியாத அளவிற்கு போலீசார் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்
285 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன