
சசிகலாவுக்கு பயந்து ஜெ.நினைவிடத்துக்கு தடை போட்ட எடப்பாடி அரசு!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் சுமார் 80 கோடி செலவில் கட்டப்பட்டது.
கடந்த 27ம் தேதி அந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
அதே நேரம் அதே 27ம் தேதி ஜெ.,வின் நெருங்கிய தோழியும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலை ஆனார்.
அவரின் விடுதலை தமிழகத்தில் குறிப்பாக ஆளும் அதிமுகவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என கூறப்பட்டது.
இந்த சூழலில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா இப்போது பெங்களூர் நகரத்தில் ஓய்வில் இருக்கிறார்.
அவர் சென்னை வரும் போது மிக பிரமாண்டமான மக்கள் கூட்டத்தோடு வரவேற்க தினகரன் தலைமையிலான அமமுக வேலைகள் செய்து வருகிறது.
சசிகலா சென்னை வந்ததும் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டருந்தார்.
அப்போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் அவரை சந்திக்க வருவார்கள் என்றும், இதன் காரணமாக தான் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்ததும் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் ஏறி சென்றார் சசிகலா.
ஜெ., சமாதியில் சசிகலா திடீரென அதிமுகவை மீட்க போராட்டம் உண்ணாவிரதம் என எதையாவது அறிவித்து தனியாக அமர்ந்தால் ஆட்சிக்கும், எடப்பாடிக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் ஜெ., நினைவிடத்திற்கு பொதுமக்கள் செல்ல அவசர அவசரமாக தடை விதித்து அறிவிப்பு வெளியானது.
இரவு நேரத்தில் இப்படி ஒரு அவசர அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
ஜெ., நினைவிடத்திற்கு சசிகலா செல்வதை தடுக்க இந்த தடையை பழனிச்சாமி அரசு அறிவித்து உள்ளது.
488 Views
