செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19
Shadow

சிம்புவின் பிறந்தநாளான இன்று ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட மாநாடு படத்தின் டீசர்!

சிம்புவின் பிறந்தநாளான இன்று ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட மாநாடு படத்தின் டீசர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை, தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளான இன்று மாநாடு படத்தின் டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். பஞ்ச் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த டீசராக இது அமைந்துள்ளது.

தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்தப்படத்திற்கு ரீவைண்ட் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக சிலம்பரசனின் பட டீசர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் தனது பிறந்தநாளில் திரையுலகப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்

மாநாடு படத்தின் தெலுங்கு டீசரை ரவி தேஜாவும், கன்னட டீசரை சுதீப்பும், மலையாள டீசரை பிரித்விராஜும், இந்தி டீசரை அனுராக் கஷ்யப்பும் வெளியிட்டனர்
348 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

three + 16 =