சனிக்கிழமை, செப்டம்பர் 26
Shadow

தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டு பிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

 

தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டுபிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததை வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆதாரங்களுடன் வெளியில் கொண்டுவந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.

இந்த விவகாரம் குறித்து விருதுநகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தலைவர் பேசும்போது அழுத்தம் கொடுக்கவே இப்போது அந்த டெண்டர்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தலைவரின் பேச்சுக்கு கிடைத்த பெரிய வெற்றி. அதற்காக வீட்டுவசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் அதன் பொதுசெயலாளர் பூச்சி எஸ்.முருகன், சங்க வழக்கறிஞர்கள் புகழ் காந்தி, முத்துக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் இன்று தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன