வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

“சக்ரா” விஷாலுக்கு இன்னொரு விருதா – கோடங்கி விமர்சனம்

 

 

“சக்ரா” விஷாலுக்கு இன்னொரு விருதா – கோடங்கி விமர்சனம்

டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் சந்தி சிரிக்கும் படம் தான் சக்ரா.

இராணுவ அதிகாரியாக விஷால், போலீஸ் அதிகாரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். இருவரும் காதலர்கள். ஒரு சின்ன சம்பவத்தால் காதலில் விரிசல்.
சுதந்திர தினத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் தொடர் கொள்ளை நடக்கிறது. 50 வீடுகளில் துப்பாக்கி முனையில் நடக்கும் கொள்ளையில் விஷாலின் பாட்டி வீடும் ஒன்று. அங்கிருந்த விஷாலின் அப்பா வாங்கிய சக்ரா விருதையும் கொள்ளையர்கள் எடுத்து செல்கிறார்கள்.

அந்த வழக்கை ஷ்ரத்தா விசாரிக்கிறார். அவரோடு விஷாலும் கை கோர்க்கிறார்.

கொள்ளை அடித்தவர்கள் யார்? அந்த சக்ரா விருது திரும்ப கிடைத்ததா? இதுதான் கதை.

இன்னொரு நாயகியாக ரெஜினா கசண்ட்ரா பின் பாதியில் எண்ட்ரி கொடுக்கிறார். வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மெனக்கெடுகிறார்.

விஷால் கதைக்கு பொருந்திய போதும் அவரின் தொடர் டயலாக்குகளை குறைத்திருக்கலாம்.
ரோபோ ஷங்கர் காமெடி என்ற பெயரில் அடிக்கும் டயலாக் அனைத்துமே கடுப்பைத்தான் கிளப்புகிறது.

யுவனின் பின்னணி இசை பல இடங்களில் பேலன்ஸ் செய்து திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது.

மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா, ரயில் ரவி இன்னும் பலர் இருந்தாலும் அவர்களை இயக்குனர் இன்னும் பயன் படுத்தி இருக்கலாம்.

ஒரு சின்ன தகவல்தான் டிஜிட்டல் மயம் என்ற பெயரில் எத்தனை ஆபத்து நம்மை சுற்றி இருக்கிறது என்பதை மிக வேகமாக சொன்னதற்காக இயக்குனர் ஆனந்தனை பாராட்டலாம்.

லாஜிக் எதையும் பார்க்காமல் சக்ராவை ரசிக்கலாம்.

– கோடங்கி

*மதிப்பீடு : 3.5/5*

772 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன