சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிப்.23ல் (இன்று) ஆலோசனை!

 

5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பிப்23ல் ஆலோசனை எனத் தகவல்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக செவ்வாயன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.

தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன