வியாழக்கிழமை, மே 21
Shadow

துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம்

துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் -திருப்பதி கோவிலில்  அறிமுகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த பிரசாதங்கள் பாலித்தீன் பைகளில் வழங்கப்பட்டது

சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பாலித்தீன் பைகள் நிறுத்தப்பட்டு, துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலியான பைகளை மண்ணில் போடும் போது துளசி விதைகள் செடிகளாக முளைக்கின்றன. தேவஸ் தான நிர்வாகம் பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பைகள் பச்சை மேஜிக் பைகள் என அழைக்கப்படுகிறது

276 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன