
விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு!
ஆளும் கட்சியின் முறைகேடுகள், அராஜகம் ஆகியவற்றைக் கண்டித்து திருப்பதி மற்றும் சித்தூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் போராட்டம் முடிவிற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜயவாடாவில் இருந்து விமானத்தில் திருப்பதிக்கு வந்த சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் இருந்து வெளியேற அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
மேலும் அவரை அதே விமானத்தில் விஜயவாடா திருப்பி அனுப்பி வைக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து சந்திரபாபு நாயுடு தற்போது திருப்பதி விமான நிலையத்தில் போராட்டம் நடத்தினார்.
அவரை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
