சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு!

ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது வழக்கமான பரிசோதனைகள்தான் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறி உள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு சென்றதை கேள்விப்பட்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், நேரில் சென்று நலம் விசாரித்தார்.
363 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன