வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை_வெல்லும்
உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் புதுசாக இருக்கும் படம். அதிரடிகள் இல்லாத ஆக்‌ஷன் படம்.
 கதையில் தான் யார் என்பதை  முழுமையாய் உள்வாங்கி நடித்திருக்கிறார் உதயநிதி.
கதை வழக்கம் போல தங்கை காதலுக்கு குறுக்கே நிற்கும் போலீஸ் அண்ணன். சூழல் காரணமாக தீவிரவாதியாக சித்தரிக்கப்படும் காதலன் இவற்றை எதிர் கொள்ளும் நாயகி.
கதை பெரிதாக இல்லாவிட்டாலும் திரைக்கதையை நம்பி களமிறங்கி புதுசாக முயற்சித்து வெற்றி பெற்று இருக்கிறார் கவுரவ்.
 இயக்குனரின் முதல் படம் தூங்கா நகரம், அடுத்து சிகரம்தொடு  படங்களை தொடர்நது  இப்படை வெல்லும் 3வது  படம்.
முதலிரண்டு போலவே புதுசாக முயற்சித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் கவுரவ்.
 நாயகனுக்கு இணையாக படம் முழுவதும் வரும் வேடம் நாயகி மஞ்சிமா மோகனுக்கு… அதை அருமையாக செய்திருக்கிறார். அழகான நாயகியை கேமராவும் அழகாகவே காட்டி இருக்கிறது. பாடல் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.
ரொம்ப நாட்களுக்கு பிறகு இப்படத்தில் சிரிக்க வைத்திருக்கிறார் சூரி.
காமெடியனாக மட்டுமில்லாமல் அழுத்தமான அந்த ரோலை வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார். ரொம்ப பேசாமல் இயக்குனர் கொடுக்கும் ரோல்களில் நடித்தாலே  சூரி குணச்சித்திர வேடங்களில் தனி இடம் பிடிக்கலாம்.
மிடுக்கான அந்த போலீஸ் வேடத்திற்கு R.K.சுரேஷ் அருமையான தேர்வு.
மனிதர் அமர்க்களப்படுத்திருக்கிறார்.  தங்கை மீது பாசம், போலீஸ் கோவம் கடைசி காட்சிகளில் பாசம் R.K.சுரேஷ் நல்ல தேர்வு.
படத்தில் ஒரே ஒரு பாடல் தான். மிக நேர்த்தியாக புது லொகேஷனில் அழகாக படமாக்கி இருக்கிறார்கள். அதனால் பாடல் காட்சியின் போது ரசிகர்கள் நிச்சயமாக எழுந்து போக மாட்டார்கள்.  ஹீரோயின் உடையில் திமுக கலரை புகுத்தி அரசியலுக்கு உதயநிதி வரப்போவதையும் காட்டி விட்டார்கள்.
படத்தின் பல சாதாரணமான காட்சிகளைக்கூட தனது காமிராவால் வெகு பிரம்மாண்டமாக படம் பிடித்து அசத்தி இருக்கிறார்ரிச்சர்ட் M நாதன்.
ஆக்‌ஷன்  படத்திற்கு என்ன தேவையோ அதை BGMல் கொடுத்து  இருக்கிறார்  D இமான். ஒரு ஒரு பாடல் தான் அதுவும்  காதல் பாடல் ரசிக்க வைக்கிறது.
சில  காட்சிகளே வந்தாலும் கந்து வட்டி முருகன் ஆக வந்து ரசிக்க வைக்கிறார் ரவி மரியா.
படத்தின் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து ரசித்து இயக்கி இருக்கும் கவுரவ் இப்படை வெல்லும் எனத் தெரிந்து தானும் போலீஸ் அதிகாரி வேஷம் போட்டு நடிக்கவும் செய்து இருக்கிறார்.
ஸ்ரீமன் சிரிப்புமன்.  ராதிகா பஸ் டிரைவராக , மகனை நம்பும் அம்மா ஆக மனசில் நிற்கிறார்.
 End கார்டில் a Film by  கௌரவ் நாராயணன் & TEAM என்று போட்டிருக்கிறார்அதற்கு ஏற்ப 200% உழைத்திருக்கிறார்கள் அவரது குழுவினர்.
எடிட்டர் பிரவீன் K L படத்தை கச்சிதமாக செதுக்கியிருக்கிறார்.
க்ளைமாக்ஸை இழுக்காமல் ஷார்ப்பாக முடித்து பார்ட் 2 இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருப்பது இயக்குனர் சாமர்த்தியம்.
 லாஜிக் குறைகள்  இருந்தாலும் படத்தின் வேகமான திரைக்கதை  அவைகளை மறக்கடித்துவிடுகிறது.
மொத்தத்தில் இப்படை வெல்லும் என டைட்டிலுக்கு பொறுத்தமாகவே வென்று உள்ளது இந்த படை..!
213 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன