வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பாஜக அண்ணாமலை!

 

கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய பாஜக அண்ணாமலை!

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிப்பேன் என்றும் நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என மிரட்டல் விடுத்திருந்தார்.
இதற்கு திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி திமுகவினர் மீது நீ கை வைத்து பார். உங்கள போல் நாங்கள் எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருப்போம்.எங்களது உடன்பிறப்புகளை யாரும் மிரட்டி விட முடியாது.

நாங்கள் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று அதிரடியாக பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

332 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன