புதன்கிழமை, மே 15
Shadow

சைக்கிளில் வாக்களிக்க வந்து பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தாரா விஜய்?

சைக்கிளில் வாக்களிக்க வந்து பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தாரா விஜய்?

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் இன்று காலை முதலே தங்களது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார். தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது

நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் புறப்பட்டார். தனது வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைந்திருப்பதாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் அவர் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் விலை உயர்வுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் சைக்கிளில் வந்த போது போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தாலும் இருபுறமும் தலைவா என்ற கோஷத்தோடு இரு பைக்குகளில் அவரது ரசிகர்கள் பேரணியாக வந்தனர்.

வாக்களித்து முடித்த பின் மீண்டும் தனது சைக்கிளில் வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்த விஜய் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் போலீசார்  அவரிடம் அறிவுறுத்தினர். மேலும் கூட்டத்தை கண்ட விஜய் அந்த முடிவை கைவிட்டுவிட்டு, ஸ்கூட்டரில் அங்கிருந்து திரும்பினார். அவர் சைக்கிளில் வந்து வாக்களித்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக கண்டித்துள்ளார் என சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

173 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன