
அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்ச்சை துணை வேந்தர் பணி ஓய்வு பெற்றார்.
தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளர் சூரப்பா நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்திற்கு அப்போதே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும், சர்ச்சைகளும் வெடித்தன.
இந்த நிலையில் இன்றுடன் அவரது பதவி காலம் முடிவடைந்தது. ஏற்கனவே இரண்டு பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டதால், இவருக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதால், இன்றுடன் அவர் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.
