வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு!

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். இப்படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை மகேஷ் பாபுவுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவர் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

329 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன