வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

மருத்துவமனையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்!

மருத்துவமனையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார்

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஸ் ஆனதை தொடர்ந்து வீட்டில் 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
280 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன