செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

மனைவிக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்த அஜித்

 

காதலி அல்லது மனைவிக்கு பிறந்தநாள் வந்தால் காதலனோ, கணவனோ அவருக்கு வைர நெக்லஸ், பட்டுப்புடவை அதைவிட காஸ்ட்லியாக வீடு அல்லது ஆடம்பர கார் பரிசளிப்பதுண்டு. ஒரு நடிகர் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்திருக்கிறார். அவர் வேறுயாருமல்ல, அஜீத்குமார்தான். அஜீத் மனைவி ஷாலினிக்கு  39வது பிறந்தநாள்.

திரையுலகினர், தோழிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஷாலினி பேட்மின்டன் வீராங்கனை. மாவட்ட, தேசிய அளவிலான போட்டிகளில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே இந்த விவரம் தெரியும். ஷாலினிக்கு வித்தியாசமான பரிசளிக்க எண்ணினார் அஜீத்.

திருவான்மியூரில் உள்ள தனது வீட்டிற்குள்ளேயே சகல வசதிகளுடன் கூடிய பேட்மின்டன் விளையாட்டு அரங்கை அமைத்து அதை பிறந்தநாள் பரிசாக அளித்தார். ஷாலினி, அஜீத் தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடிப்புக்கு முழுக்குபோட்டு குடும்ப பொறுப்பை ஏற்றிருக்கும் ஷாலினி பேட்மின்டன் விளையாட்டில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறாராம்.

329 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன