
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.அழகிரிக்கு அழைப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்
இந்த நிலையில், அண்ணன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அழகிரி, “முதல்வராக ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைபதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மே 7-ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது
மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரது சகோதரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
