வியாழக்கிழமை, மே 21
Shadow

பேரை மாற்றிக்கொண்டு பேஷன் ஷோவில் களம் இறங்கிய நடிகரின் மனைவி

சமீபத்தில் குடும்ப வாழ்க்கை பிரச்னையால் போலீஸ் நிலையம் சென்றவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவருடைய மனைவி நித்யா, தனது கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், குழந்தையைக் கொடுமைப் படுத்துவதாகவும் போலீஸில் புகார் அளித்திருந்தார். குடும்பத்தில் நிறைய சிக்கல்கள் நிலவியதை அடுத்து தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்துவந்த பாலாஜி இப்போது தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்

 

சென்னையில் ஃபேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. அந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கலந்துகொண்டுள்ளார். ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடைபோட்ட நித்யாவை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டனர்.

நித்யா, ‘Women Endeavor’ எனும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான NGO அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். பழைய பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி வாழ முடிவெடுத்திருக்கும் நித்யா தனது பெயரை ‘தேஜு’ என மாற்றிக்கொண்டுள்ளாராம்

409 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன