வியாழக்கிழமை, மே 16
Shadow

ஜீவாவின் கீ பட சிங்கிள் டிராக்கை இயக்குனர் கவுதம் மேனன் 28ம் தேதி மாலை வெளியிடுகிறார்…!

 

ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கீ’. புதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கியுள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டார். தற்போது இப்படத்தில் இடம் பெறும் சிங்கிள் பாடல் ஒன்றை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட இருக்கிறார்.

இப்படத்தில் இடம் பெறும் ‘ராஜா பாட்டு…’ என்ற பாடலை இயக்குனர் கவுதம் மேனன் வரும் நவம்பர் 28ம் தேதி இரவு 7.45 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். விரைவில் இப்படம் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

235 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன