
கோடி ரூவா கொடுத்தாலும் அவருடன் நடிக்க முடியாது – ஓவிய நடிகை தடாலடி
பெரிய பாஸ் மூலம் திடீர் புகழ் அடைந்தவர் அந்த ஓவிய நடிகை. பெரிய பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அரசியலில் இருக்கும் கருணையான காமெடி நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அட்வான்சும் வாங்கியிருந்தாராம்.
இப்போது திடீர் புகழ் காரணமாக அந்த காமெடி நடிகருடன் நடிக்க முடியாது என்று கைவிரித்து விட்டாராம்.நீங்க கோடி ரூபா கொடுத்தாலும் இனி அவருடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டாங்களாம் .விஷயம் படம் தயாரிக்கிறவங்க சங்கத்துக்கு போச்சுது. அவுங்க நடிகைகிட்ட விளக்கம் கேட்டாங்க. சொன்ன தேதியில அவுங்க படம் ஆரம்பிக்கலன்னு பதில் சொல்லி வாங்கி அட்வான்சை வட்டியோடு திருப்பிக் கொடுத்திட்டாராம் நடிகை. ஆனால் வேற ஏதோ காரணம் இருக்கிறது என்று கிசு கிசுக்க படுகிறது இதனால் காமெடி நடிகர் கடுப்புல இருக்காராம்.
