வியாழக்கிழமை, மே 21
Shadow

“அன்பு செழியனை தண்டிக்க வேண்டும்” நடிகை பூர்ணா

சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பைனான்சியர் அன்பு செழியன் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதால் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு செழியனை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், அன்பு செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும், நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


நடிகை பூர்ணா டுவிட்டரில் அன்பு செழியனை கண்டித்து கருத்து பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-

“அசோக்குமார் சிறந்தவர்களில் எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். நல்ல மனம் படைத்தவர். நீங்கள் எங்களை விட்டு போக முடியாது. எப்போதும் எங்களுடனேயே இருக்கிறீர்கள். அன்பு செழியன் போன்றவர்கள் சினிமாவில் இருக்கக்கூடாது.

இந்த உலகத்தை விட்டு அசோக்குமார் சென்றுவிட்டார். அன்பு செழியனுக்கு பெரிய தண்டனையை கொடுக்க வேண்டும். இதை நாம் செய்ய முடியும். இதற்காக நாம் ஒன்றாக கைகோர்த்து செயல்படுவோம்”.

தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் கடைசியாகப் பணிபுரிந்த ‘கொடி வீரன்’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடித்திருப்பவர் பூர்ணா. அசோக்குமார் தற்கொலை செய்த உடனேயே அவருடைய ட்விட்டரில், ‘அசோக் சார், நீங்கள் சிறந்தவரிலும் சிறந்தவர். நீங்கள் நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எங்களை விட்டுப் போக முடியாது, நீங்கள் எங்களுடனேயே இருப்பீர்கள்.’ என ட்வீட் செய்திருந்தார்.

அன்புச்செழியன் அரசியல்வாதிகளின் ஆதரவோடு இருக்கிறாரே என ரசிகர் ஒருவர் பூர்ணாவிற்கு ரிப்ளை செய்தார். ‘கடவுள் என ஒருவர் இருக்கிறார். அசோக் குடும்பத்தைப் போலவே இவருக்கும் ஒரு குடும்பம் இருப்பதால் யோசிக்கிறார் என நினைக்கிறேன். அந்தக் கண்ணீர் பதில் சொல்லும்’ என கெட்டவார்த்தையைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார் பூர்ணா.

அன்புச்செழியனுக்கு ஆதரவாக சீனு ராமசாமி, விஜய் ஆன்டனி, சுந்தர் சி, தேவயானி, மனோபாலா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலரும் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் கேரளாவிலிருந்து வந்துள்ள ஒரு நடிகை எதைப் பற்றியும் கவலைப்படாமல் இப்படி தைரியமாக ஒரு ட்வீட் செய்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

351 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன