திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ‘தளபதி’ படத்திற்கு முக்கிய இடம் உண்டு. ரஜினி நடித்த படங்களில் சிறந்த படமாகக் குறிப்பிடப்படுவது ‘தளபதி’ படம். ‘தளபதி’ படத்தின் மூலமே இயக்குநர் மணிரத்னமும் அதிகமாகப் பேசப்பட்டார். நட்பை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுகு இப்போதும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது இந்தப் படம் தான். இந்தப் படத்தில் இணைந்து நடித்த ரஜினியும், மம்முட்டியும் ‘சூர்யா தேவா’ ஆகவே ரசிகர்கள் மனதில் பதிந்திருப்பதே இப்படத்தின் வெற்றி. இந்தக் கூட்டணி இப்போது மீண்டும் இணைகிறது

 


1991-ல் மணிரத்னம் இயக்கிய படம் ‘தளபதி’. ரஜினி – மம்மூட்டி இருவரும் முதன்முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடித்தனர். இளையராஜா அந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் தமிழின் கிளாசிக் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது
அந்தச் சமயத்தில் சூப்பர் ஹிட்டான ‘தளபதி’ படத்திற்கு பிறகு ரஜினியும், மம்முட்டியும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் 26 வருடங்களுக்குப் பிறகு தற்போது அவர்கள் இருவரும் ஒரு மராத்தி படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார்கள்
தீபக் பாவேஷ் என்பவர் இயக்கும் அந்த மராத்தி படத்திற்கு ‘பஷாயதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்துள்ள ரஜினி, தனது தாய்மொழியான மராத்தியில் இந்தப் படம் மூலம்தான் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

208 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன