
வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், சினிகோ உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் படத்தை வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஆன்லைனில் வெளியாகி ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
மெடிக்கல் மாபியாவை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் சரி, படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அறம் சூப்பர் ஹிட் படத்தை அடுத்து நயன்தாராவின் வேலைக்காரன் ரிலீஸாக உள்ளது.
802 Views
