வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில்!

விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில்!

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ள பகத் பாசில், மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். மலையன்குஞ்சு என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது, நடிகர் பகத் பாசில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகத் பாசில் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது: “படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக ஏற்பட்ட காயத்தில் இருந்து தேறி வருகிறேன். ஆபத்துக்கு அருகில் சென்று நான் உயிர் பிழைத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கீழே விழும்போது எனது முகம் தரையில் மோதுவதற்கு முன்பு, ஏதோ ஒரு உந்துதலில் கைகளை தரையில் ஊன்றிவிட்டேன். இப்படி சமயோசிதமாக நான் செய்தது அதிர்ஷ்டம் என்று மருத்துவர் சொன்னார். விபத்து காரணமாக மூக்கில் மூன்று தையல்கள் போடப்பட்டு உள்ளன. அந்த தழும்பு மறைய கொஞ்ச காலம் ஆகும்” என பகத் பாசில் தெரிவித்தார்.

 

31 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

two × 3 =