
நம்பிக்கை நாணயம் அற்றுப்போனதா தமிழ் திரையுலகம்…!
பைனான்சியர் அன்புச்செழியனை
ஏமாற்றினாரா சிவி.குமார்..?!
இரு கடன்… ஒரு செட்டில்மெண்ட்…
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நேர்மையான நடவடிக்கைகள்
ஒழிந்துபோய் ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி குறை சொல்லி
அடுத்தவர் பணத்தை ஏமாற்றி பிரபலம் என்ற போர்வையில்
ஒளிந்து கொள்ளும் அவலம் அதிகரித்து வருகிறது.
சினிமா தொழில் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடந்து
வந்த நிலை மாறி இப்போது நாக்கில் தேன் தடவி
அந்த தேனில் விஷம் வைக்கும் அதிர்ச்சிகளும் அதிகரித்து வருகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்…
பிரபல இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சசிக்குமார்
மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் என்ற பைனான்சியரிடம் வாங்கிய
கடனை திருப்பி தராத நிலையில் ‘பைனான்சியர் அன்புச்செழியன்
மிக மோசமாக என்னை மிரட்டியதால் நான் தற்கொலை செய்கிறேன்’
என்று சசிக்குமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்ஷன்
நிறுவனத்தை சேர்ந்தவருமான அசோக்குமார் ஒரு கடிதம்
எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இதையடுத்து கந்துவட்டி கேட்டு மிரட்டும்
பைனான்சியர் அன்புச்செழியனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
என்று சசிக்குமார் அமீர் உள்ளிட்ட பலர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவானார்.
அசோக்குமார் தற்கொலை தமிழ் சினிமாவில்
பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிர்ப்பாக ஒரு பிரிவும்,
ஆதரவாக ஒரு பிரிவும் என சினிமாகாரர்கள் இரண்டு
அணியாக மாறி ஆளாளுக்கு விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இதில் வேடிக்கை என்ன என்றால் பைனான்சியர் அன்புச்செழியனை கைது செய்ய
வேண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோஷம் போடும் பலரும்
அதே அன்புச்செழியனிடம் பணம் வாங்கியவர்கள்தான்.
அவர்கள் திருப்பித் தரவேண்டிய பணங்கள் மட்டுமே
பல நூறு கோடிகள் என்கிறது விவரம் அறிந்த வட்டம்.
இதன் காரணமாக தமிழ் சினிமாவில் எந்த படம் ரிலீஸ்
ஆக வேண்டுமானாலும் அன்புச்செழியன் பணம் இல்லாமல்
அவரது கண்ணசைவு இல்லாமல் வெளியாக முடியாத
நிலையை தமிழ் சினிமா தானே எடுத்துக் கொண்டது.
இந்த தயாரிப்பாளரும் ஒரு பிரபலமான குடும்பத்தில் இருந்து தயாரிப்புக்கு வந்தவர்தான்.
தனது முதல் பட தயாரிப்புக்கே என் வீட்டார் கூட நம்பி பணம் தரவில்லை
அன்புச்செழியன்தான் பணம் கொடுத்தார் என்று
பகிரங்கமாக மேடையில் பேசியவர்தான் இந்த தயாரிப்பாளர்.
அவர் எடுத்த மிருக படத்துக்கும் அன்புச்செழியன் தான் பணம் கொடுத்திருக்கிறார்.
பட ரிலீஸ் நேரத்தில் அன்புச்செழியனுக்கு தரவேண்டிய
பணத்தை தனக்கு பதில் தனக்கு பணம் தரவேண்டிய
இன்னொரு தயாரிப்பாளர் உங்களுக்கு தந்து விடுவார் எனக்கு என்ஓசி வழங்கி விடுங்கள் என்று
அன்புச்செழியனிடம் அந்த அரை டவுசர் தயாரிப்பாளர் பேசியிருக்கிறார்.
அவர் பேசியதுபோலவே தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக மாறியிருக்கிற
அந்த தயாரிப்பாளரும் தனது வங்கி கணக்கில் இருந்து
பைனான்சியர் அன்புச்செழியன் வங்கி கணக்குக்கு
மிருக தயாரிப்பாளர் தரவேண்டியதாக சொல்லப்பட்ட
11 கோடி ரூபாயை அனுப்பியிருக்கிறார்.
அதை பெற்றுக் கொண்ட பைனான்சியரும் தயாரிப்பாளரின்
மிருக படம் ரிலீஸ் ஆவதற்கு வசதியாக என்ஓசி
கொடுக்க… அந்த படமும் ரிலீஸ் ஆகி ஓடி மீண்டும் பெட்டிக்குள் வந்து அடைந்து கொண்டது.
இது முடிந்து பல மாதங்களுக்கு பிறகு இயக்குனராக மாறியிருக்கிற
தயாரிப்பாளர் மாயமான தனது படத்துக்கு
கடன் தீர்த்ததற்கான என்ஓசியை தரும்படி பைனான்சியர் அன்புச்செழியனிடம் கேட்கிறார்…
பைனான்சியர் அன்புச்செழியனுக்கு கடும் அதிர்ச்சி…
இருக்காதா பின்னே…
அந்த மாயமான படம் எடுத்திருக்கிற தயாரிப்பாளர் ஏற்கனவே தரவேண்டிய
பணம் 11 கோடி தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது…
அப்படியிருக்க என்ஓசி கேட்டால் எப்படி என்று விவரம் கேட்கிறார்.
பணம் தரவேண்டிய மாயமான பட தயாரிப்பாளர் ரொம்ப கூலாக
‘ஏற்கனவே வங்கி மூலம் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் 11 கோடியை அனுப்பி விட்டேன்.
என் கடன் தீர்ந்தது. எனக்கு என்ஓசி வேண்டும்’ என்கிறார்.
பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தலை கிர்ர்ராகிறது… இருக்காதா…
பல நேரங்களில் அவர் பேச்சும் பல தலகளுக்கு கிர்ர்ராகியிருக்கிறதே…
அந்த பணம் மிருக பட ரிலீசுக்கு செட்டில் செய்யப்பட்டது என்று கூறிய
பைனான்சியர் அன்புச்செழியன் வாதம் மாயமான படம் எடுத்த தயாரிப்பாளரிடம் செல்லவில்லை.
அந்த நேரம் பார்த்து அசோக்குமார் தற்கொலை மரணம் வேறு
பைனான்சியர் அன்புச்செழியன் தொழிலுக்கு ஈட்டியாக மாற…
தெரியாமலேயே தான் வைத்த கண்ணியில் தான் சிக்கிவிட்டதை
உணர்ந்து கொண்ட பைனான்சியர் அன்புச்செழியன் அடுத்த கட்டத்துக்கு யோசிக்க ஆரம்பித்தார்…
இதற்குள் அன்புச்செழியன் மீது பணம் கொடுத்த மாயமான பட இயக்குனரும்,
டவுசர் தயாரிப்பாளரும் புகார் கொடுக்க… நிலமை மேலும் சிக்கல் ஆனது.
இடியாப்ப சிக்கலில் இருந்து வெளியேற முதலில் நூல் நுனியை கண்டுபிடிப்போம்
என்று யோசித்த பைனான்சியர் அன்புச்செழியன் மாயமான படம் எடுத்த இயக்குனருக்கு
தரவேண்டிய என்ஓசியை கொடுத்த சிக்கலை அப்போதைக்கு தீர்த்துக் கொண்டார்.
சமீபத்தில் வெளியான சதுரங்கவேட்டை பட மோசடியை விட மிக ஞானமாக
திட்டமிட்ட மோசடியாக பைனான்சியர் அன்புச்செழியன் தொழில் வரலாற்றில்
இந்த 11 கோடி ஏமாற்றம் அழியா புள்ளியாகியிருக்கிறது
என்றே கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இந்த டவுசர் தயாரிப்பாளர் மீது ஏற்கனவே பிரபலமான
மெகா ரெய்டு புகழ் குறைந்த வயசு
கோடீஸ்வர வளர்ப்பு வாரீசுவிடம் 100 கோடி ஆட்டைய போட்ட பகீர்
புகாரும் கோடம்பாக்க சுவர்களில் பட்டு தெறித்துக் கொண்டுதான் இருக்கிறது.
மாயமான படம் எடுத்திருக்கிற இயக்குனரும் டவுசர் தயாரிப்பாளரும்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நண்பர்களாம்…
பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய 11 கோடியை
திருப்பித் தரும்போது திட்டம்போட்டே இப்படி ஒரு கேம்
ஆடியிருக்கிறார்கள் என்கிறது பைனான்சியர் அன்புச்செழியன் தரப்பு.

இந்த குற்றச்சாட்டில் சிக்கியது வேறு யாருமல்ல மாயவன் படம் மூலம் இயக்குனராக
மாறியிருக்கிற தயாரிப்பாளர் சி.வி.குமார்தான் என்கிற தகவலும்
கோடம்பாக்கத்தில் றெக்கை கட்டி பறக்கிறது… இந்த சூழலில் நேற்று முன்தினம்
தயாரிப்பாளர் சி.வி.குமார் அவசர பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.
அழைப்பு விடுத்த சில மணிநேரங்களில் அந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.

பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ் சினிமாவில் கந்துவட்டி
கொடுமைக்காரராக சித்தரிக்கப்படும் இந்த நிலையில் அன்புச்செழியனிடம் வாங்கிய
11 கோடி ரூபாயை திருப்பி தருவது போல தந்து
தயாரிப்பாளர் சி.வி.குமார் மெகா மோசடி
செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்
‘கரகாட்டக்காரன்’ பட வாழைப்பழ காமெடி போல ஏமாந்திருக்கும்
பைனான்சியர் அன்புச்செழியன் எப்படி கொடுமைக்கார கந்துவட்டி மிரட்டல்
பேர்வழியாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது…

அதேபோல, 100 கோடியை ஆட்டைய போட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுடைய பெயர்.
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான நேரத்தில்
ஜாஸ் சினிமாஸ் உரிமையாளர் விவேக் அழைப்பின் பேரில்
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சென்றதாகவும் தொடர்ந்து படங்கள்
எடுக்கவும் அப்படி எடுக்கிற படங்களை ஜாஸ் சினிமாஸ் வெளியிடவும்,
ஜெயா தொலைக்காட்சிக்கு டிவியில் ஒளிபரப்பும் உரிமை வழங்க வேண்டும் என்ற வாய் மொழி
நம்பிக்கை ஒப்பந்த அடிப்டையில் அந்த பணம் தரப்பட்டதாகவும்,
ஆனால், பணம் வாங்கிய பிறகு அப்படி ஒரு சம்பவமே நடக்காததுபோல தயாரிப்பாளர்
ஞானவேல்ராஜா ஒதுங்கிக் கொண்டார் என்றும்
அதேநேரம், மத்திய மாநில அரசுகள் எதிராக இருப்பதால் எதையும் செய்ய முடியாமல்
விவேக் தரப்பு கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும்
ஒரு கதையும் கோடம்பாக்கத்தில் பலமாக உலாவருகிறது.

இதற்கிடையில், பத்திரிகையாளர்களை அழைத்துவிட்டு
சந்திப்பை திடீரென தவிர்த்த தயாரிப்பாளர் சி.வி.குமார்
என்ன சொல்ல வந்தார்… அவரை தடுத்தது யார்…
அவர் மிரட்டப்பட்டாரா… மிரண்டு போனாரா…
உண்மையில் பைனான்சியர் அன்புச்செழியனை
தயாரிப்பாளர் சிவி.குமார் மோசடி செய்தாரா என்பதும்…
ஜாஸ் சினிமாஸ் விவேக் 100 கோடிகளை நம்பிக்கையின் பேரில்
பட தயாரிப்புக்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கொடுத்தாரா…
அதை திருப்பித் தராமல் ஞானவேல்ராஜா மோசடி செய்து விட்டாரா என்பதும்
இவர்களின் மனசாட்சிகளுக்கு மட்டுமே தெரியும்…
இவர்களாக வாய் திறந்து சொல்லாதவரை குற்றச்சாட்டுகளும்
மோசடி புகார்களும் காத்து வாக்கில் புறப்பட்டு கதையாக மாறி
நாளைக்கே ஒரு சினிமாவாக கூட வெளியாகும்…
அதையும் இவர்களே பைனான்சும் கொடுத்து தயாரித்து ரிலீஸ் செய்வார்கள்.
இவர்களுக்கு சொந்தமான டிவியிலும் அந்த படம் ஒளிபரப்பாகலாம்…
இதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை…!
கோடங்கி
