வியாழக்கிழமை, ஆகஸ்ட் 20
Shadow

6 மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

 

புதுக்கோடடை மாவட் டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் ராமையா.இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் முறையான அனுமதியுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த நிலையில் மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்தோம். இந்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவிக்க மறுக்கின்றனர்.
எனவே மணலை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க அனுமதிக்கவும், 6 லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மணலை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி  மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது.
328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன