புதன்கிழமை, அக்டோபர் 7
Shadow

மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் – எழில் கூட்டணி

விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் எழில் இயக்குகிறார்.

இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘யோகி’ பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் – எழில் இணையும் இரண்டாவது படம் இது. பெயரிடப்படாத இப்படத்தை துஷ்யந்த் தயாரிக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். முருகன் கதை எழுத ஜோதி அருணாச்சலம் வசனம் எழுத உள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகும் 12-வது படம் இது என்பது கவனிக்கத்தக்கது.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன