வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 21
Shadow

ராஜீவ் மேனன்- ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘சர்வம் தாளமயம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’, ‘நாச்சியார்’ ஆகிய படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

‘மின்சார கனவு’ மற்றும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வருகிறார்.

9 பாடல்கள் உள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் – ஜி.வி.பிரகாஷ் இருவருமே உறவினர்கள் என்றாலும் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமானதாக சொல்லப்பட்டது. ஆனால், சாய் பல்லவிக்குப் பதிலாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.

397 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன