செவ்வாய்க்கிழமை, மே 24
Shadow

கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் வீடுகளில் இன்று காலை 6.30 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 3 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 23 இடங்களில் நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் புலியகுளம், சுங்கம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் நடந்தது.

கோவை புலியகுளம் ஏரிமேட்டை சேர்ந்தவர் தினேஷ் (வயது 36). பல் டாக்டர். இவர் இடையர்பாளையத்தில் ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் டாக்டர் தினேஷ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த மாவோயிஸ்ட் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றினர். பின்னர் டாக்டர் தினேசை கைது செய்து கேரள ஜெயிலில் அடைத்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் சுங்கம் காமராஜர் வீதியை சேர்ந்த டேனிஷ் (32) என்பவரும் மாவோயிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கேரளாவில் பதுங்கி இருந்த அவரை கேரள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இன்று கேரள மாநிலத்தில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 பிரிவுகளாக பிரிந்து மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் டாக்டர் தினேஷ், டேனிஷ், சந்தோஷ் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

புலியகுளம் ஏரிமேட்டில் உள்ள டாக்டர் தினேஷ் வீட்டிற்கு இன்று காலை 6.30 மணிக்கு 8 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றனர். அவர்கள் வீட்டின் கதவை பூட்டி விட்டு சோதனை நடத்தினர். சுங்கம் காமராஜர் வீதியில் உள்ள டேனிஷின் வீட்டிற்கு மற்றொரு பிரிவை சேர்ந்த 8 பேர் கொண்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் மாவோயிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சந்தோஷ் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மாயமானார். இவர் காட்டில் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவரது வீட்டிலும் இன்று காலை 6.30 மணி முதல் 7பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடைபெறும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
73 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

12 − nine =