ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்’!
நடிகர் விக்ரமின் 60-வது படம் ‘மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘மகான்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
383 Views

